நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஆலம் எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில்  அத்துமீறி நுழைந்தவர் கைது

ஷாஆலம்:

ஷாஆலம் எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்தவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். ரேப்பிட் கேஎல் ஓர் அறிக்கையின் வாயிலாக இதை உறுதிபடுத்தியது.

ஜாலான் மேரு நிலையத்தில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்ததன் காரணமாக, ஷாஆலம் எல்ஆர்டி ரயில் சேவைகளில் 30 நிமிடங்கள் இடையூறு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காலை சுமார் 6.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தால், ஜாலான் மேரு, ஜம்பத்தான் கோத்தா நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவை 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

இதன் மூலம், சட்ட அமலாக்க நடவடிக்கை எடுக்கவும், ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதற்கு தண்டவாளங்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்யவும் முடிந்தது.

செயல்பாட்டு அதிகாரிகள், துணைப் போலிஸ் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு, சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்தனர் என்று ரேப்பிட் கேஎல் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset