செய்திகள் மலேசியா
சுவா சட்டமன்றத் தொகுதியில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளுக்காக சிறப்பு திட்ட வரைவு உருவாக்கப்படும்: குணராஜ்
சுவா:
சுவா சட்டமன்றத் தொகுதியில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு சிறப்பு திட்ட வரைவு உருவாக்கப்படும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் சுவா சட்டமன்றத் தொகுதியில் டத்தோ யூ பூன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரும் வகையில் சுவா சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்திய மக்களுடன் இன்று சந்திப்பு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
குறிப்பாக இவ்வட்டார மக்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.
இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் முறையாக தீர்வு காண நம்பிக்கை கூட்டணி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். அதற்கு நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி அரசு நீடிக்க வேண்டும்.
ஆகவே இத்தொகுதி இந்தியர்கள் முழுமையாக நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள் ஆகும் என்று குணராஜ் கூறினார்.
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.
அவரின் தலைமையில் நெகிரி செம்பிலான் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது.
ஆகவே நெகிரி செம்பிலானில் மாற்றம் தேவையில்லை. நம்பிக்கை கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
மஹ்கோத்தா செராஸில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: போலிஸ் விசாரணை
July 21, 2026, 3:06 pm
FOREST CITY நெட்வொர்க் ஸ்கூல் விவகாரம்: 19 வெளிநாட்டவர்களைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை
July 21, 2026, 2:14 pm
