செய்திகள் மலேசியா
10 முக்கிய வாக்குறுதிகளுடன் நம்பிக்கை கூட்டணி நெகிரி செம்பிலான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது
சிரம்பான்:
கிட்டத்தட்ட 10 முக்கிய வாக்குறுதிகளுடன் நம்பிக்கை கூட்டணி நெகிரி செம்பிலான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக நம்பிக்கையுடன் இருங்கள் என்ற கருப்பொருளில் அமைந்த தனது தேர்தல் அறிக்கையின் மூலம் நம்பிக்கை கூட்டணி நேற்று வெளியிட்டது.
இதில் அக்கூட்டணி 10 முக்கிய உறுதிமொழிகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை, நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், துணைத் தலைவர் அந்தோனி லோக், நெகிரி செம்பிலான் அமானா தலைவர் டத்தோ இப்ராஹிம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த உறுதிமொழிகளில், நிலையான, தூய்மையான, மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை நிலைநிறுத்த வேண்டும்.
மக்கள் நலத் திட்டத்தை வலுப்படுத்துதல், போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குதல், 30,000 அதிக ஊதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் தரமான கல்வி, அத்துடன் 20,000 மலிவு விலை வீடுகளைக் கட்டுதல், நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவை அடங்கும்.
மேலும் இதில் இளைஞர்கள், பெண்கள், குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சுற்றுலா மேம்பாடு மற்றும் பாரம்பரியப் பெருமை, சமச்சீரான நகர்ப்புற, கிராமப்புற மேம்பாடு, ஃபெல்டா, நவீன வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு; உள்கட்டமைப்பு, தரமான சுகாதார சேவைகள், அத்துடன் அனைவருக்கும் மத ஒற்றுமை, நல்லிணக்கம், முன்னேற்றம் ஆகியவையும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
மஹ்கோத்தா செராஸில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: போலிஸ் விசாரணை
July 21, 2026, 3:06 pm
FOREST CITY நெட்வொர்க் ஸ்கூல் விவகாரம்: 19 வெளிநாட்டவர்களைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை
July 21, 2026, 2:14 pm
