செய்திகள் மலேசியா
நீலாய் தொகுதிக்கான மருத்துவமனை நீலாயில் தான் இருக்க வேண்டும்; மருத்துவமனைக்காக தொடர்ந்து போராடுவேன்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நீலாய் தொகுதிக்கான மருத்துவமனை நீலாயில் தான் இருக்க வேண்டும். இம் மருத்துவமனைக்காக தொடர்ந்து போராடுவேன்.
நீலாய் சட்டமன்றத் தொகுதியின் பெர்சத்து வேட்பாளர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட தொகுதியாக உள்ளது.
ஆதலால் இத்தொகுதியில் மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.
இந்த கோரிக்கைகள் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இத்தொகுதியில் மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்புகளும் வந்தன.
500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது கட்டப்படும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போதைய தேர்தல் காலத்தில் நீலாயில் கட்டப்படவிருந்த மருத்துவமனை தற்போது ஏய்ன்ஸ்டேக் பகுதிக்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த முன்மொழிவை ஓர் நீலாய் குடிமகன் என்ற முறையில் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
காரணம் நீலாய் மக்களுக்கான மருத்துவமனை நீலாயில் தான் இருக்க வேண்டும். இது தான் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.
ஆக நீலாய் சட்டமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இந்த மருத்துவமனைக்காக தொடர்ந்து போராடுவேன். இது நீலாய் மக்களுக்கான எனது வாக்குறுதி என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 10:45 am
ஷாஆலம் எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
July 21, 2026, 10:08 am
10 முக்கிய வாக்குறுதிகளுடன் நம்பிக்கை கூட்டணி நெகிரி செம்பிலான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது
July 20, 2026, 8:44 pm
தமீம் டஹ்ரி மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 20, 2026, 7:44 pm
சிரம்பான் ஜெயா தொகுதிக்கு நான் புதியவன் அல்ல; மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்: முகுந்தன்
July 20, 2026, 5:38 pm
சுவா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை: அமினுடின் ஹரூன் விளக்கம்
July 20, 2026, 4:48 pm
