நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாக்டர் மகாதீர் முஹம்மதை சந்தித்த ஈமான் கட்சியின் நிர்வாகக் குழுவினர்

புத்ரா ஜெயா:

சமீபத்தில் 101ஆவது பிறந்த நாளை கொண்டாடிய துன் டாக்டர் மகாதீர் முஹம்மதை நேரில் சந்தித்து ஈமான் கட்சியினர் தங்களது வாழ்த்துகளை  தெரிவித்துக் கொண்டனர்.

ஈமான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ முஹம்மது இஸ்மாயில் தலைமையில் ஈமான் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர்கள் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் பரிசாக pulut kuning வழங்கி அதனை வெட்டச் செய்தனர். 

தொடர்ந்து அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கினார்கள். மேலும் அண்மையில் நடைபெற்ற ஈமான் கட்சியின் தேர்தல் குறித்தும் அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அவரிடம் இருந்து முக்கியமான ஆலோசனைகளை தாங்கள் பெற்றதாக டத்தோ முஹம்மது இஸ்மாயில் கூறினார். 

அரசியலில் தங்கள் அடுத்த கட்ட வியூகம் குறித்தும் துன் மகாதீர் கேட்டறிந்ததோடு அவர் சில முக்கியமான அறிவுரைகளையும் வழங்கினார். அவரது அனுபவமிக்க ஆலோசனைகளை மதிப்புமிக்கவையாக நாங்கள் கருதுகிறோம்.எங்கள் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு அது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று டத்தோ இஸ்மாயில் கூறினார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset