நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த முறை தேசிய முன்னணிக்கு வாய்ப்பளிப்போம் என வாக்காளர்கள் கூறுவது புதிய நம்பிக்கையை தருகிறது: டத்தோ அசோஜன்

சிரம்பான்:

இந்த முறை தேசிய முன்னணிக்கு வாய்ப்பளிப்போம் என வாக்காளர்கள் கூறுவது புதிய நம்பிக்கையை தருகிறது.

இது தேசிய முன்னணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என மஇகா உதவித் தலைவர் டத்தோ அசோஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜொகூர் மாநிலத்தில் மஇகா நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது.

இதன் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மஇகா போட்டியிடுகிறது.

ஜொகூரில் வெற்றி பெற்று விட்டோம். அதனால் நெகிரியிலும் வெற்றி எளிதாக கிடைத்து விடும் என்று கூற முடியாது.

காரணம் நெகிரி செம்பிலான் தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானதாகும். குறிப்பாக சவாலானதாகும்.

இருந்தாலும் மஇகா வேட்பாளர்கள் போட்டியிடும் சிரம்பான் ஜெயா, ஸ்ரீ தஞ்சோங் தொகுதிகளில் தீவிரமாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பிரச்சாரத்தின் போது ஜொகூரின் நீல அலை இங்கும் பரவி இருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் இந்த முறை தேசிய முன்னணிக்கு ஆதரவை தருவோம் என்று வாக்காளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக சீன வாக்காளர்கள் கூறுவது எங்களுக்கு புரிய நம்பிக்கையை தருகிறது.

ஆக நெகிரி செம்பிலான் தேர்தலில் இரு தொகுதிகளை கைப்பற்ற மஇகா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று டத்தோ அசோஜன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset