செய்திகள் மலேசியா
சிரம்பான் ஜெயா தொகுதிக்கு நான் புதியவன் அல்ல; மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்: முகுந்தன்
சிரம்பான் ஜெயா:
சிரம்பான் ஜெயா தொகுதிக்கு நான் புதியவன் அல்ல. இங்குள்ள மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்.
சிரம்பான் ஜெயா நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் சு.முகந்தன் இதனை கூறினார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் எண் 3-இல் போட்டியிடும் வேட்பாளர் சு.முகந்தன், வெற்றி பெற்றால் இளைஞர்கள், மகளிர், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அவர் உறுதியளித்தார்.
"நான் இந்த மண்ணின் மைந்தன். கடந்த 14 ஆண்டுகளாக அரசியலில் மக்களுக்காக சேவை செய்து வருகிறேன். மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்துள்ளேன்.
2012ஆம் ஆண்டு முதல் ஜசெகாவில் இணைந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், 2012 முதல் 2018 வரை கம்போங் பாசிர் பகுதி மக்களின் பிரச்சினைகளை ரஹாங் சட்டமன்றம் மற்றும் ராசா நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று பல தீர்வுகளைப் பெற்றுத் தந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், 2019ஆம் ஆண்டு சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரனின் சிறப்பு அதிகாரியாகவும், 2022ஆம் ஆண்டு துணை கவுன்சிலராகவும் பணியாற்றிய அனுபவம் தமக்கு இருப்பதாக தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும், மக்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கும் சேவைகளையும் முன்னெடுத்ததாகவும், வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், பாலடைந்த நிலையில் வசித்து வந்த ஐந்து குடும்பங்களின் வீடுகளைச் சீரமைப்பதற்காக மாநில அரசின் நிதி உதவியை பெற்றுத் தந்ததாகவும், தீபாவளி சந்தைகளை ஏற்பாடு செய்து சிறு வியாபாரிகளுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றால், இளைஞர்களுக்கு TVET தொழில்திறன் பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்தி வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதோடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள், மகளிருக்கு தொழில்திறன் பயிற்சிகள், அரசு உதவித் திட்டங்களைப் பெற்றுத் தருதல் உள்ளிட்ட முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
"மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காண்பேன். அரசு துறைகளுடன் நேரடியாக இணைந்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன்," என்று சு.முகந்தன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 10:45 am
ஷாஆலம் எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
July 21, 2026, 10:08 am
10 முக்கிய வாக்குறுதிகளுடன் நம்பிக்கை கூட்டணி நெகிரி செம்பிலான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது
July 20, 2026, 8:44 pm
தமீம் டஹ்ரி மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 20, 2026, 5:38 pm
சுவா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை: அமினுடின் ஹரூன் விளக்கம்
July 20, 2026, 4:48 pm
