நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமீம் டஹ்ரி மீது நாளை குற்றம் சாட்டப்படும்

லங்காவி:

தமீம் டஹ்ரி அப்துல் ரசாக் மீது நாளை குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

தண்டனைச் சட்டத்தின் 295ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கு தொடர்பாக, 33 வயதான தமீம் டஹ்ரி இரண்டு நாள் காவல் காலம் இன்று முடிவடைந்தது.

இதை அடுத்து லங்காவி போலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக லங்காவி போலிஸ் தலைவர் கைருல் அசார் நூருடின் கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506, 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, சந்தேக நபர் முன்னதாக ஜூலை 18 அன்று போர்ட்டிக்சன் உள் போலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

பின்னர், ஜூலை 19 முதல் 20 வரை இரண்டு நாட்களுக்கு அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset