நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகக் கோப்பை போட்டியைக் காண மெர்டேக்கா சதுக்கம் வந்தவர்கள் மைதானத்தை குப்பை கூளமாக்கியது வேதனை தருகிறது: ஹன்னா யோ சாடல்

கோலாலம்பூர்:

2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் பொதுத் திரையிடலைத் தொடர்ந்து, டத்தாரான் மெர்டேக்கா பகுதி குப்பைகளால் நிரம்பியிருந்த நிலையில், அதனைச் சுத்தம் செய்ய அயராது உழைத்த கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஊழியர்களுக்குப் பிரதமர் துறை (கூட்டாட்சிப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா யோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதில் பொதுமக்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று ஹன்னா வலியுறுத்தினார். குப்பைகளைத் தொட்டிகளில் கொட்டுவது ஒரு அடிப்படை குடிமைப் பொறுப்பு என்றும், அதை முழுவதுமாக அரசு ஊழியர்களிடம் விட்டுவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“குப்பைகளைத் தொட்டிகளில் கொட்டுவது என்பது நாம் அனைவரும் சுயமாகச் செய்ய வேண்டிய ஒரு செயலாகும்.

“பொதுச் சேவைகளைப் பெறுவதற்கான உரிமை இருப்பதால், ஒவ்வொரு பொறுப்பையும் அரசு ஊழியர்களிடம் ஒப்படைத்துவிடலாம் என்று அர்த்தமல்ல.” "நாம் வேண்டுமென்றே விட்டுச்செல்லும் குப்பைகளை அவர்கள் சுத்தம் செய்ய வேண்டியதில்லை," என்று அவர் இன்று முகநூலில் பதிவிட்டார்.

டத்தாரான் மெர்டேக்கா என்பது வெறும் ஒரு நிகழ்விடம் மட்டுமல்ல; அது தேசத்தின் வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமல்ல தலைநகரின் கண்ணியத்தின் சின்னம், அதை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

"கோலாலம்பூர் நமது வீடு. நமது சொந்த வீட்டை நாமே அசுத்தப்படுத்திவிட்டு, அதை வேறு யாராவது சுத்தம் செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்," என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset