செய்திகள் உலகம்
நார்வேயில் பயங்கர தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீயினால் சாம்பலாயின்
ஒஸ்லொ-
நார்வே நாட்டின் தென்பகுதியில் உள்ள டிராம்பன் நகருக்கு அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
தலைநகர் ஒஸ்லோவிலிருந்து மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது எவரும் காணாமல் போனதாகவோ எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அங்கு வீசிய பலத்த காற்றினால் தீ அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கும் வேகமாக பரவியதை அடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்களை காவல்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர்.
எனினும், இந்த கோர தீ விபத்து எதனால் மற்றும் எப்படித் தொடங்கியது என்பது குறித்த தெளிவான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
