செய்திகள் கலைகள்
வயதான தோற்றத்தில் வெளியில் வந்த சல்மான்: ரசிகர்கள் அதிர்ச்சி
மும்பை:
நடிகர் சல்மான் கானின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சல்மான் கான் பல ஆண்டுகளாக பாலிவுட்டின் நட்சத்திர நடிகராக, ஹிந்தி சினிமா கொண்டாடும் மூன்று கான்களான ஷாருக்கான், ஆமீர்கானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். ஆனால், தனித்துவமான வாழ்க்கைக் கொண்டாட்டங்கள், சர்ச்சையான கடந்த கால காதல்கள் என சல்மான் மட்டும் சர்ச்சையும் பரபரப்பும் கொண்ட நாயகனாகவே இருக்கிறார்
இறுதியாக, சல்மான் நடிப்பில் வெளியான சிக்கந்தர் தோல்விப்படமானது. மேலும், பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். தற்போது, இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நடிகர் சல்மான் கானின் உடல் மெலிந்த தோற்றம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதானாலும் கட்டுமஸ்தாக பல நடிகர்கள் இருக்கும் போது, உடற்பயிற்சியில் கவனம் கொண்ட சல்மான், இப்படி வயதான தோற்றத்தில் இருப்பது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கந்தர் வரை நன்றாக இருந்தவர் திடீரென உடல் எடையை இழந்ததற்கு, நலமற்ற உடல் காரணமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர், சல்மானுக்கு 60 வயதாகிவிட்டது. எப்போதும் கட்டுமஸ்தமான தோற்றத்திலேயே இருக்க முடியுமா? அவருக்கும் வயதாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
