செய்திகள் மலேசியா
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சிரம்பான் ஜெயா தொகுதி மக்களுக்கு புதிய பிரதிநிதி தேவை: தர்மன்
சிரம்பான்:
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி
மக்களுக்கு புதிய பிரதிநிதி தேவை.
அத்தொகுதியைச் சேர்ந்த தர்மன் இதனை கூறினார்.
கடந்த பல தவணைகளாக சிரம்பான் ஜெயா தொகுதியில் நம்பிக்கை கூட்டணியின் ஜசெக வேட்பாளர் வெற்றி பெற்று வருகிறார்.
அந்த வேட்பாளருக்கு தான் நாங்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறோம்.
தேர்தல் காலத்தில் வேகமாக இருந்தாலும் தேர்தலுக்கு பின் வந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எந்தவொரு நடவடிக்கைகளும் எடுப்பது இல்லை.
குறிப்பாக சிரம்பான் ஜெயாவில் அடிப்படை வசதிகள் கூட முழுமையாக இல்லை..
ஏன் பிள்ளைகள் இளைஞர்கள் விளையாடுவதற்கு கூட திடல் இல்லை. பொழுதுபோக்குக்கு என எதுவும் இல்லை.
படிப்பு, வேலை வாய்ப்புகளும் கூட பெரிதாக இல்லை.
இதனால் சிரம்பான் ஜெயா தொகுதியில் மாற்றம் வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சிரம்பான் ஜெயா தொகுதி
மக்களுக்கு புதிய பிரதிநிதி தேவைப்படுகிறார்.
இதன் அடிப்படையில் தான் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளனுக்கு எங்களின் ஆதரவை வழங்குவதாக முடிவு எடுத்துள்ளோம்.
என்னோடு சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்களும் இம்முடிவை எடுத்துள்ளதாக தர்மன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 10:45 am
ஷாஆலம் எல்ஆர்டி ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
July 21, 2026, 10:08 am
10 முக்கிய வாக்குறுதிகளுடன் நம்பிக்கை கூட்டணி நெகிரி செம்பிலான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது
July 20, 2026, 8:44 pm
தமீம் டஹ்ரி மீது நாளை குற்றம் சாட்டப்படும்
July 20, 2026, 7:44 pm
சிரம்பான் ஜெயா தொகுதிக்கு நான் புதியவன் அல்ல; மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்: முகுந்தன்
July 20, 2026, 5:38 pm
சுவா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை: அமினுடின் ஹரூன் விளக்கம்
July 20, 2026, 4:48 pm
