செய்திகள் கலைகள்
இந்தியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள்
புதுடெல்லி:
72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகராக மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன், தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது, சிறந்த நடிகையாக யாமி கவுதம், சிறந்த தமிழ்ப் படம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன், சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், சிறந்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 71 ஆண்டுகளாக தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மாலை 5.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2024ல் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் டெல்லியிலுள்ள தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
நான்-ஃபியூச்சர் பிலிம் பிரிவில் ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு, தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டார்.
மேலும், முழுநீள திரைப்படங்களுக்கான பிரிவில் கலா மாஸ்டர் தமிழகத்தில் இருந்து சென்று பங்கேற்றார்.
இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளை சேர்ந்த 400 படங்கள் பார்வையிடப்பட்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழு தலைவராக ஜெயராஜ் செயல்பட்டார்.
தமிழ் திரையுலகிற்கு 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. ‘அமரன்’ படத்துக்கு 3 விருதுகள், ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு 2 விருதுகள், ‘மகாராஜா’ படத்துக்கு 2 விருதுகள், ‘ராயன்’, ‘மெய்யழகன்’, ‘ப்ளூ’ (ஆவணப்படம்) ஆகிய படங்களுக்கு தலா 1 விருது என்று, மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளது.
தனுஷ் எழுதி இயக்கி நடித்த ‘ராயன்’ என்ற படம், சிறந்த தமிழ் படத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சிறந்த தேசிய நலன், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படம் என்று தேர்வு செய்யப்பட்ட ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்துக்கும் இதில் ஹீரோவாக நடித்திருந்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது.
ஏற்கனவே ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நடிப்புக்காகவும் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ ஆகிய படங்களுக்கு தயாரிப்பாளருக்காகவும் தனுஷ் தேசிய விருது பெற்றுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
