செய்திகள் விளையாட்டு
23ஆவது FIFA உலகக் கிண்ணத்தில் புதிய வரலாற்று மைல்கல்: சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்குத் தங்கப் பதக்கங்களுடன் 'சாம்பியன்ஷிப் மோதிரங்கள்' அறிமுகம்
வாஷிங்டன் :
23ஆவது FIFA உலகக் கிண்ண காற்பந்து வரலாற்றில் முதல் முறையாக, இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பாரம்பரிய உலகக் கிண்ணம் மற்றும் தங்கப் பதக்கங்களுடன் பிரத்யேக 'சாம்பியன்ஷிப் மோதிரங்கள்'வழங்கப்படவுள்ளதாக அனைத்துலக காற்பந்து சம்மேளனமான FIFA அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மலேசிய நேரப்படி திங்கள் கிழமை அதிகாலை 3:00 மணிக்கு) நடைபெறவுள்ள விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மகுடத்திற்காக மோதவுள்ளன
இந்த இறுதிப் போட்டிக்கு பின்னர் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இந்த மோதிரங்கள் அணிவிக்கப்படவுள்ளன.
2026 உலகக் கிண்ண தொடரை நினைவுகூரும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 2,026 மோதிரங்கள் மட்டுமே கொண்ட வரையறுக்கப்பட்ட பதிப்பாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மோதிரங்களில் 30 மோதிரங்கள் மட்டுமே சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்களுக்கும் அதன் குழுவினருக்கும் வழங்கப்படும்.
மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகளவில் அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற நினைவுப் பொருட்களாக ரசிகர்களின் விற்பனைக்காக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதிரங்களின் ஒரு பக்கத்தில் உலகக் கிண்ண டிராபியின் வடிவமும், மற்றொரு பக்கத்தில் உலகக் கிண்ணத்தை வெல்லும் நாட்டின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பும் இடம் பெற்றிருக்கும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 5:14 pm
2026 FIFA உலகக் கிண்ண போட்டியின் இறுதியாட்டம்: அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் மோதல்
July 17, 2026, 8:59 am
பெலேவின் முதல் இறுதிப் போட்டி ஜெர்சி 20.7 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது
July 17, 2026, 8:55 am
ஒரே கேப்டன்: மெஸ்சியின் புதிய அதிரடி சாதனை
July 16, 2026, 5:32 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: ஏரன் டாய் - காங் கய் ஸிங் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
July 16, 2026, 11:36 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா-ஸ்பெயின் மோதல்
July 16, 2026, 11:35 am
