நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 FIFA உலகக் கிண்ண போட்டியின் இறுதியாட்டம்: அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் மோதல் 

வாஷிங்டன் - 

2026ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் ஜூலை 19ஆம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெறவுள்ளது. 

இந்த இறுதியாட்டத்தில் நடப்பு உலகக் கிண்ண சாம்பியனான அர்ஜெண்டினா அணியும் 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண சாம்பியனான ஸ்பெயின் அணியும் மோதுகின்றன 

எதிர்வரு ஜூலை 19ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ( மலேசியாவில் அதிகாலை 3 மணிக்கு ஜூலை 20ஆம் தேதி திங்கட்கிழமை ) 3 மணிக்கு மெட்லைஃப் விளையாட்டரங்கில் இறுதியாட்டம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 

ஸ்பெயின் அணி 2024ஆம் ஆண்டு யூரோ போட்டியின் வெற்றியாளராகவும் அர்ஜெண்டினா 2024 கோப்பா அமெரிக்கா வெற்றியாளராகவும் உள்ளனர் 

இந்த முறை 48 அணிகள் பங்குப்பெற்ற இந்த உலகக் கிண்ண போட்டியில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

மூன்றாவது நான்காவது இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டமானது பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மலேசியா நேரப்படி ஜூலை 19ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset