செய்திகள் விளையாட்டு
கடைசி நிமிட கோல்களால் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறியது அர்ஜெண்டினா
நியூயார்க்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி, அர்ஜெண்டினா அணி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியது.
கடைசி நிமிடங்களில் அர்ஜென்டினா வீரர்கள் காட்டிய அதிரடி ஆட்டம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என சமனில் முடிந்தது.
தொடர்ந்து நடந்த பிற்பாதியில் ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டனி கார்டன் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.
கோல் வாங்கி பின்தங்கியதால் ஆவேசமடைந்த அர்ஜெண்டினா வீரர்கள், இங்கிலாந்தின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டனர்.
ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், 85ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் தரம் வாய்ந்த ஒரு கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.
ஆட்டம் சமனில் முடிந்து கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் (90+2') அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லவுடாரோ மார்டினெஸ் இங்கிலாந்து தற்காப்பு அரணை சிதறடித்து அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார்.
மார்டினெஸ் அடித்த இந்த மேஜிக் கோலால் அர்ஜெண்டினா 2-1 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி வீரர்கள் சோகத்தில் மூழ்க, அர்ஜெண்டினா ரசிகர்கள் மைதானத்தையே திருவிழாக் கோலமாக மாற்றினர்.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா 2026 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கிண்ணத்தை தக்கவைக்கும் முனைப்பில் காத்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2026, 5:32 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: ஏரன் டாய் - காங் கய் ஸிங் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
July 16, 2026, 11:36 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா-ஸ்பெயின் மோதல்
July 15, 2026, 10:19 am
டெஷாம்ப்ஸ் ஒரு மகத்தான சாதனையை விட்டுச் செல்கிறார்
July 15, 2026, 9:18 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் நுழைந்தது ஸ்பெயின்: வெளியேறியது பிரான்ஸ்
July 14, 2026, 12:36 pm
FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஸ்பெயின் அணி முன்னணி வகிக்கிறது
July 14, 2026, 9:52 am
உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்
July 14, 2026, 9:48 am
