நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FIFA உலகக் கிண்ண இறுதியாட்டத்திற்கு ஸ்லாவ்கோ வின்சிக் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்: அனைத்துலக காற்பந்து சம்மேளனம் FIFA அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

நியூ யார்க்- 

2026 FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் ஜூலை 19ஆம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மெட்லைஃப் நகரில் நடைபெறவுள்ளது. 

இந்த இறுதியாட்டத்தில் நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணியும் நடப்பு யூரோ கிண்ண காற்பந்து சாம்பியனான ஸ்பெயின் அணியும் மோதுகின்றன. 

உலகக் கிண்ண இறுதியாட்டத்தின் நடுவராக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த 46 வயதான அனுபவமிக்க நடுவர் ஸ்லாவ்கோ வின்சிக்கை FIFA அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளது. 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டிக்கு அவர் நடுவராகச் செயல்படுவார்.

உலகக் கிண்ண இறுதிப்போட்டி ஒன்றை வழிநடத்தும் முதல் சிலோவேனியா நடுவர் என்ற பெருமையை இதன் மூலம் வின்சிக் பெறுகிறார்.

ஐரோப்பிய அரங்கில் மிகச் சிறந்த நடுவராகப் பெயரெடுத்த வின்சிக், கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து FIFA-வின் அங்கீகாரம் பெற்ற நடுவராகப் பணியாற்றி வருகிறார்.

நடப்பு 2026 தொடரில் ஏற்கனவே மூன்று போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளார். இந்த இறுதிப்போட்டி அவரது உலகக் கிண்ண வரலாற்றில் ஆறாவது போட்டியாகவும், நடப்புத் தொடரின் நான்காவது போட்டியாகவும் அமையவுள்ளது.

2024 ஸ்பெயின் அணியின் யூரோவின் அரையிறுதி ஆட்டங்களிலும் 2022 உலகக் கிண்ண போட்டியில் சவூதி அரேபியா- அர்ஜெண்டினா அணிகளின் ஆட்டத்திலும் அவர் நடுவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset