நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FIFA உலகக் கிண்ண அரையிறுதி சுற்றின் இங்கிலாந்து -அர்ஜெண்டினா ஆட்டம்: தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை 

லாஸ் ஏஞ்சல்ஸ்- 

2026 FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி சுற்று ஆட்டம் அர்ஜெண்டினா- இங்கிலாந்து இடையில் நடைபெற்றது 

இந்த அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது 

 இந்த ஆட்டத்தைத் தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

அமெரிக்காவின் ஆங்கில மொழி ஒளிபரப்பான 'ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்'  தொலைக்காட்சியில், இந்த ஆட்டத்தை சராசரியாக 15.063 மில்லியன் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர்.

இதன் மூலம், முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் படைத்த 11.462 மில்லியன் பார்வையாளர்கள் என்ற சாதனையை இந்த ஆட்டம் ஒரே நாளில் முறியடித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது, பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் 6.595 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

தற்போதைய புள்ளிவிவரங்கள் அதனைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 FIFA உலகக் கிண்ண இறுதியாட்டம் ஜூலை 19ஆம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெறவுள்ளது. இறுதியாட்டத்தில் ஸ்பெயின் - அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset