செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா-ஸ்பெயின் மோதல்
மியாமி:
உலகக் கிண்ணத்தை வெல்ல அர்ஜெண்டினா, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்று வருகிறது.
48 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையல், வருகிற ஞாயிற்று கிழமை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ்- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஸ்பெயின் 2-0 என வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அர்ஜெனண்டினா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர்
லியோனல் மெஸ்ஸியின் உதவியால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் அர்ஜெண்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அதன்படி ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெல்ல அர்ஜெண்டினா, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதுதவிர மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில்வெற்றி பெறும் அணி மூன்றாவது இடத்தை பிடிக்கும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2026, 5:32 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: ஏரன் டாய் - காங் கய் ஸிங் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
July 16, 2026, 11:35 am
கடைசி நிமிட கோல்களால் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறியது அர்ஜெண்டினா
July 15, 2026, 10:19 am
டெஷாம்ப்ஸ் ஒரு மகத்தான சாதனையை விட்டுச் செல்கிறார்
July 15, 2026, 9:18 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் நுழைந்தது ஸ்பெயின்: வெளியேறியது பிரான்ஸ்
July 14, 2026, 12:36 pm
FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஸ்பெயின் அணி முன்னணி வகிக்கிறது
July 14, 2026, 9:52 am
உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்
July 14, 2026, 9:48 am
