செய்திகள் விளையாட்டு
ஒரே கேப்டன்: மெஸ்சியின் புதிய அதிரடி சாதனை
அட்லாண்டா:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி புதிய சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் அட்லாண்டா அரங்கில், உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா அதிரடியாக விளையாடியது.
போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆனால், 2ஆவது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது.
ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2-வது கோலும் அர்ஜெண்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது.
முதல் பாதியில் பின்தங்கிய நிலையில் இருந்த அர்ஜென்டினா, 2ச்ச்வது பாதியில் அதிரடியை வெளிப்படுத்தியது.
அதனுடன் 39 வயதில், அந்த அணியின் கேப்டன் மெஸ்சியும் புதிய சாதனையை படைத்துள்ளார்.
வேறு எந்த கேப்டனும் படைக்காத சாதனையை அவர் படைத்துள்ளார்.
3 உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு அணியை கொண்டு சென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதன்படி, 2014, 2022 ஆகிய ஆண்டுகளில் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்று சாதனையை படைத்துள்ளார். இதில், 2022ஆம் ஆண்டு கிண்ணத்தையும் வென்று காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 5:14 pm
2026 FIFA உலகக் கிண்ண போட்டியின் இறுதியாட்டம்: அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் மோதல்
July 17, 2026, 8:59 am
பெலேவின் முதல் இறுதிப் போட்டி ஜெர்சி 20.7 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது
July 16, 2026, 5:32 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: ஏரன் டாய் - காங் கய் ஸிங் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
July 16, 2026, 11:36 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா-ஸ்பெயின் மோதல்
July 16, 2026, 11:35 am
