நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மானிய விலையிலான சமையல் எண்ணெய்யில் முறைகேடு: சிலாங்கூரில் ஆறு பேர் கைது 

ஷா ஆலாம்- 

மானிய விலையிலான சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலின் ரகசியக் கிடங்குகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நடத்திய 'ஒப்ஸ் தீரிஸ் 4.0 ஒருங்கிணைந்த சோதனையில் இந்த நடவடிக்கைகள் அம்பலமானது 

பண்டார் பிங்கிரான் சுபாங் மற்றும் ஜாலான் பக்தி ஆகிய இடங்களில் உள்ள இரு கிடங்குகளில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், சுமார் 6,426 கிலோகிராம் எடையுள்ள மானிய விலை சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளுடன் மொத்தம் 129,874 ரிங்கிட் 50 காசு மதிப்பிலான பல்வேறு கடத்தல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வெட்டி, அவற்றை டாங்கிகளில் சேகரித்து பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மொத்த வியாபாரிகளுக்கு விற்று சட்டவிரோத லாபம் ஈட்டுவதையே இந்த கும்பல் தங்களின் முக்கியச் செயல்பாடாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணைபோனதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஒருவரும், ஐந்து வெளிநாட்டு ஆண்களும் விசாரணைக்கு உதவும் பொருட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1961ஆம் ஆண்டு கட்டுப்பாட்டு விநியோகச் சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அமலாக்க பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார். 

கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்ட 'ஒப்ஸ் தீரிஸ் 4.0' நடவடிக்கையின் கீழ் இதுவரை மொத்தம் 165,568 கிலோகிராம் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு 137 முறைகேட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset