நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சி இன்னும் தேசியக் கூட்டணியின் சட்டப்பூர்வமான உறுப்பினராகவே உள்ளது: டான்ஸ்ரீ மொஹைதின்

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சி இன்னும் தேசியக் கூட்டணியின் சட்டப்பூர்வமான உறுப்பினராகவே உள்ளது.

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

தேசியக் கூட்டணியை நிறுவிய பெர்சத்து கட்சி, இன்னும் கூட்டணியின் சட்டப்பூர்வமான உறுப்பினராகவே உள்ளது.

ஆனால் தேசியக் கூட்டணியில் பெர்சத்துவின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

ஒரு சிறப்பு உச்ச மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படாததும் இதில் அடங்கும் என்று டான்ஸ்ரீ மொஹைதின் கூறினார்.

பெர்சத்துவுடனான தேர்தல் தொகுதிப் பேச்சுவார்த்தைகள் தொடரவில்லை.

நியாயமற்ற காரணங்களைக் கூறி அவை வேண்டுமென்றே நிறுத்தப்பட்டன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset