நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் வரை BN-PH அங்கம் வகிக்கும் ஒற்றுமை அரசாங்கம் நிலைத்திருக்கும்

ஈப்போ- 

பேராக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் வரை ஒற்றுமை அரசாங்கம் நிலைத்திருக்கும் என்று பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சராணி முஹம்மத் கூறினார் 

மலாக்கா மாநில அரசியல் சூழல் போல் இல்லாமல் பேராக் மாநிலத்தில் சட்டமன்றம் கலைக்கப்படும் வரை நடப்பு அரசாங்கம் இருக்கும் 

தற்போதைய ஆட்சிப் பொறுப்பு நீடிப்பதால், சட்டமன்றம் கலைக்கப்படும் வரை அனைத்துக் கட்சிகளும் இணைந்து தங்களின் சிறந்த சேவையைத் தொடரும் என சராணி முஹம்மத்  உறுதியளித்தார்.

மாநில மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தி வரும் வேளையில், வீணான அரசியல் மோதல்களைத் தவிர்த்து அணுகுமுறைகளில் உள்ள வேறுபாடுகளை மட்டுமே முன்னிறுத்தி அரசாங்கம் நகர்வதாக அவர் விவரித்தார்.

தற்போது பேராக்கில் உள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளில், DAP 18 இடங்கள் உட்பட நம்பிக்கை கூட்டணி மற்றும் BN கூட்டணியைச் சேர்ந்த 33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த ஒற்றுமை அரசாங்கம் பலமாக இயங்கி வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset