செய்திகள் மலேசியா
நெட்வொர்க் பள்ளி விவகாரம்; 256 வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகள் என உறுதி செய்யப்பட்டனர்
கோலாலம்பூர்:
ஃபோரஸ்ட் சிட்டியில் நெட்வொர்க் பள்ளி நடவடிக்கை தொடர்பாகச் சோதிக்கப்பட்ட மொத்தம் 256 வெளிநாட்டினர் சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தியதும், மீதமுள்ள 10 பேர் தொழில்முறை வருகை அனுமதிச் சீட்டுகளை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
அந்த 10 பேரில் நான்கு பேர் அமெரிக்கர்கள், மூன்று ரஷ்யர்கள், இரண்டு ஆஸ்திரேலியர்கள், ஒரு இந்தியர் அடங்குவதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஜக்காரியா ஷபான் கூறினார்.
இந்த குடிநுழைவு சோதனையில் இரண்டு உள்ளூர் மக்களும் ஈடுபட்டிருந்தனர்.
பரிசோதிக்கப்பட்ட மொத்த வெளிநாட்டினரில், 179 பேர் ஆண்கள், 87 பேர் பெண்களும் அடங்குவர்.
சமூக வருகை அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டினர், சுற்றுலா, வணிகம் அல்லது வருகைகள் போன்ற நோக்கங்களுக்காக மலேசியாவில் தற்காலிகமாகத் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:51 pm
மானிய விலையிலான சமையல் எண்ணெய்யில் முறைகேடு: சிலாங்கூரில் ஆறு பேர் கைது
July 17, 2026, 12:24 pm
புதிதாக பிறந்த சிசுவை வீசிய குற்றச்சாட்டு தொடர்பில் 19 வயதுடைய ரொஹிங்யா பெண் கைது
July 17, 2026, 12:20 pm
தேசிய செந்தமிழ் விழா; தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையை வலுப்படுத்துகிறது: வோ கா வோ
July 17, 2026, 12:00 pm
கூட்டணி இல்லாமல் DAP கட்சியால் வெகு தூரம் பயணிக்க முடியாது: அந்தோனி லோக் கருத்து
July 17, 2026, 10:55 am
ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
July 17, 2026, 9:10 am
நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி புத்ராஜெயாவை நோக்கி நகரும்: ஹம்சா
July 17, 2026, 9:03 am
