செய்திகள் மலேசியா
புதிதாக பிறந்த சிசுவை வீசிய குற்றச்சாட்டு தொடர்பில் 19 வயதுடைய ரொஹிங்யா பெண் கைது
இஸ்கண்டார் புத்ரி
புதிதாக பிறந்த சிசுவை ஒரு ஹோட்டலின் கழிவறையில் வீசியதாக சந்தேகிக்கப்படும் 19 வயது ரொஹிங்யா பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்
கடந்த ஜூலை 5ஆம் தேதி அதிகாலை 2.39 மணிக்கு BUKIT INDAHவில் உள்ள தமன் நுசா இடமான் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு சந்தில், பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு கரு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தமது துறைக்குத் தகவல் கிடைத்ததாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் எம். குமாரசன் கூறினார்.
சிசு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சந்தேகத்தின் பேரில் 34 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதே நாளில் புக்கிட் இண்டா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்
"சந்தேக நபர், ஹோட்டல் அறையின் கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்து, பின்னர் அதனை ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் வைத்து, ஹோட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியாகக் கட்டிடத்திற்குக் கீழே உள்ள சந்தில் வீசியதாக நம்பப்படுகிறது," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்ட ஆண் ஜூலை 5 முதல் 8 வரை நான்கு நாட்களுக்கும், பெண் ஜூலை 5 முதல் நாளை வரை 14 நாட்களுக்கும், குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 51(5)(b) இன் படி காவலில் வைக்கப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 & 40 ஆண்டுகளுக்குக் குறையாத சிறை தண்டனை மற்றும் 12 முறை பிரம்படிகள் வழங்கப்படலாம்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:51 pm
மானிய விலையிலான சமையல் எண்ணெய்யில் முறைகேடு: சிலாங்கூரில் ஆறு பேர் கைது
July 17, 2026, 12:21 pm
நெட்வொர்க் பள்ளி விவகாரம்; 256 வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகள் என உறுதி செய்யப்பட்டனர்
July 17, 2026, 12:20 pm
தேசிய செந்தமிழ் விழா; தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையை வலுப்படுத்துகிறது: வோ கா வோ
July 17, 2026, 12:00 pm
கூட்டணி இல்லாமல் DAP கட்சியால் வெகு தூரம் பயணிக்க முடியாது: அந்தோனி லோக் கருத்து
July 17, 2026, 10:55 am
ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
July 17, 2026, 9:10 am
நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி புத்ராஜெயாவை நோக்கி நகரும்: ஹம்சா
July 17, 2026, 9:03 am
