செய்திகள் மலேசியா
ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
ஜொகூர்பாரு:
இன்று இங்குள்ள இஸ்தானா புக்கிட் செரீனில் நடைபெறவிருந்த ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்விழா நாளை இதே நேரத்தில் நடைபெறும் என்று இன்று காலை ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், விழா ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
ஜொகூரின் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் முன்னிலையில், இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
மேலும், இந்த விழாவில் மந்திரி புசார் ஓன் ஹபீஸ் காசி, ஜொகூர் அரச மன்றத்தின் தலைவர் ரஹீம் ரம்லி மற்றும் மாநிலச் செயலாளர் முஹம்மது ரிதா அப்துல் காதிர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:51 pm
மானிய விலையிலான சமையல் எண்ணெய்யில் முறைகேடு: சிலாங்கூரில் ஆறு பேர் கைது
July 17, 2026, 12:24 pm
புதிதாக பிறந்த சிசுவை வீசிய குற்றச்சாட்டு தொடர்பில் 19 வயதுடைய ரொஹிங்யா பெண் கைது
July 17, 2026, 12:21 pm
நெட்வொர்க் பள்ளி விவகாரம்; 256 வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகள் என உறுதி செய்யப்பட்டனர்
July 17, 2026, 12:20 pm
தேசிய செந்தமிழ் விழா; தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையை வலுப்படுத்துகிறது: வோ கா வோ
July 17, 2026, 12:00 pm
கூட்டணி இல்லாமல் DAP கட்சியால் வெகு தூரம் பயணிக்க முடியாது: அந்தோனி லோக் கருத்து
July 17, 2026, 9:10 am
நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி புத்ராஜெயாவை நோக்கி நகரும்: ஹம்சா
July 17, 2026, 9:03 am
