செய்திகள் மலேசியா
10 வயது சிறுமி கொலை: இருவர் கைது
கோத்தா கினபாலு:
பத்து வயது சிறுமி கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் வழக்கில் போலிசார் இருவரை கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 13 முதல் சம்பந்தப்பட்ட சிறுமி மர்மமான முறையில் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செபாங்காரில் உள்ள காம்போங் நம்பக் என்ற இடத்தில், கட்டுமானத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு அருகிலுள்ள புதர் சரிவில் அந்தச் சிறுமி கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்டு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதால், சோகத்தில் முடிந்தது.
இன்னும் சோகமாக, 10 வயதான நூர்ஜில்யா அப்துல்லாவின் உடல், அவரது முகத்தை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கோத்தா கினபாலு மாவட்ட போலிஸ் அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக 39, 42 வயதுடைய இரண்டு பேரைக் கைது செய்தனர்.
நேற்று இரவு 10.38 மணிக்கு பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த தகவல் கிடைத்தவுடன், தடயவியல் பிரிவுடன் ஒரு போலிஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் குழு மேற்கொண்ட ஆரம்பகட்ட பரிசோதனையில், பாதிக்கப்பட்டவரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டவர் அணிந்திருந்த ஆடைகளின் அடிப்படையில், அவரது தாய் பின்னர் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காட்டினார் என்று கோத்தா கினபாலு மாவட்டத்தின் தற்காலிக போலிஸ் தலைவர் சையத் லோட் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:51 pm
மானிய விலையிலான சமையல் எண்ணெய்யில் முறைகேடு: சிலாங்கூரில் ஆறு பேர் கைது
July 17, 2026, 12:24 pm
புதிதாக பிறந்த சிசுவை வீசிய குற்றச்சாட்டு தொடர்பில் 19 வயதுடைய ரொஹிங்யா பெண் கைது
July 17, 2026, 12:21 pm
நெட்வொர்க் பள்ளி விவகாரம்; 256 வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகள் என உறுதி செய்யப்பட்டனர்
July 17, 2026, 12:20 pm
தேசிய செந்தமிழ் விழா; தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையை வலுப்படுத்துகிறது: வோ கா வோ
July 17, 2026, 12:00 pm
கூட்டணி இல்லாமல் DAP கட்சியால் வெகு தூரம் பயணிக்க முடியாது: அந்தோனி லோக் கருத்து
July 17, 2026, 10:55 am
ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
July 17, 2026, 9:10 am
