நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய செந்தமிழ் விழா; தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையை வலுப்படுத்துகிறது: வோ கா வோ

தைப்பிங்:

தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையையும் கலாச்சார செழுமையையும் வலுப்படுத்தும் முக்கிய மொழிகளில் ஒன்றாகும்.

ஆதலால் மாணவர்கள் தாய்மொழி கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்றும் கல்வி துணையமைச்சர் வோங் கா வோ வலியுறுத்தினார்.

கல்வியமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான 10ஆவது செந்தமிழ் விழாவின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் இன்று தைப்பிங்கில் உள்ள ஹோட்டல் கிராண்ட் பேரனில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

தமிழ் மொழி, இலக்கியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார்.

தமிழ் மொழி போட்டிகள் மாணவர்களின் மொழித் திறன், சிந்தனை ஆற்றல், படைப்பாற்றல், தன்னம்பிக்கையை வளர்க்கும் சிறந்த தளமாக அமைந்துள்ளதாகவும், இத்தகைய நிகழ்வுகளை கல்வி அமைச்சு தொடர்ந்து ஊக்குவித்து ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு தமிழ் மொழி மற்றும் இலக்கியப் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வோங் கா வோ பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சு மற்றும் மாநில கல்வித் துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset