நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டெஷாம்ப்ஸ் ஒரு மகத்தான சாதனையை விட்டுச் செல்கிறார்

ஆர்லிங்டன்:

உலகக் கிண்ண அரையிறுதியில் பிரான்ஸ் அணி வெளியேற்றப்பட்டபோது, ​​டிடியர் டெஷாம்ப்ஸின் பொற்காலம் ஏமாற்றத்துடன் முடிவடைந்தது.

ஆனால், அந்தத் தோல்வி அவர் விட்டுச்சென்ற மகத்தான பாரம்பரியத்தின் மதிப்பைச் சிறிதும் குறைக்கவில்லை.

கடந்த 2022 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவிடம் பிரான்ஸ் தோற்றது.

இன்று அதிகாலை 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, யூரோ 2024, யுஇஎப்ஏ தேசிய லீக், 2026 உலகக் கிண்ணம் என அடுத்தடுத்து நடந்த மூன்று முக்கியப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகளிலும் ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியுள்ளது.

இருப்பினும், தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2010 உலகக் கிண்ண போட்டியில் ஏற்பட்ட வீரர்களின் கிளர்ச்சி, அவமானத்தின் அதிர்ச்சியிலிருந்து நாட்டின் கால்பந்து இன்னும் மீளாதிருந்த காலகட்டத்தில்,

2012-ல் பிரான்ஸ் அணியின் பொறுப்பை ஏற்ற டெஷாம்ப்ஸ், தனது சொந்த மண்ணில் நிர்வாகியாக கிண்ணத்தை வென்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 2018-ல் பிரான்ஸ் ணிக்கு இரண்டாவது உலகப் பட்டத்தைப் பெற்றுத் தந்த மேலாளராகவே சிறப்பாக நினைவுகூரப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset