செய்திகள் விளையாட்டு
SORAK PIALA DUNIA 2026- FIFA உலகக் கிண்ண அரையிறுதி ஆட்டம்: அகண்ட திரையில் கண்டு ரசிகர்கள் உற்சாகம்
கோலாலம்பூர்:
2026 FIFA உலக கிண்ண போட்டியின் அரையிறுதி சுற்று ஆட்டத்தை அகண்ட திரையில் ரசிகர்கள் SORAK PIALA DUNIA 2026 காற்பந்து திருவிழாவில் கண்டு களித்தனர்.
தலைநகரில் உள்ள KL FESTIVAL PARK திறந்தவெளி மைதானத்தில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட காற்பந்து ரசிகர்கள் காற்பந்தாட்டத்தைக் கண்டு களித்தனர்.
பிரான்ஸ், ஸ்பெயின் ஆட்டம் மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு நடந்தது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆட்டத்தை ரசித்து பார்த்தனர்.
SORAK PIALA DUNIA@KL FESTIVAL PARK எனும் FIFA உலகக் கிண்ண ரசிகர் திருவிழா ஜூலை 14 முதல் 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்நிகழ்வு விழா காலம் முழுவதும் 20,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
‘Biggest Screen, Biggest Roars!!!’ என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த உலகக்கிண்ண ரசிகர் விழாவில், 160 அடி × 40 அடி அளவிலான மிகப்பெரிய LED அகண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14 முதல் 20 வரை செவ்வாய்க்கிழமை முதல் திங்கட்கிழமை வரை நடைபெறும் இந்நிகழ்வில், போட்டி நாட்களில் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ரசிகர்கள் போட்டிகளை கண்டு களிக்கலாம்.
மேலும், போட்டி இல்லாத நாட்களில் மாலை 6.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன், Berjaya Corporation, Starbucks, U Mobile மற்றும் 7-Eleven ஆகிய நிறுவனங்கள் இந்நிகழ்வை ஆதரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், HotFM, FlyFM, KoolFM மற்றும் Eight WuXian ஆகிய வானொலி நிலையங்கள் அதிகாரப்பூர்வ ஊடக கூட்டாளர்களாக இணைந்துள்ளதுடன், Gardenia, TikTokShop, Sugarbomb, Ajmal Perfume, Kahf உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
30-க்கும் மேற்பட்ட உணவு, பான விற்பனையாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 10:19 am
டெஷாம்ப்ஸ் ஒரு மகத்தான சாதனையை விட்டுச் செல்கிறார்
July 15, 2026, 9:18 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் நுழைந்தது ஸ்பெயின்: வெளியேறியது பிரான்ஸ்
July 14, 2026, 12:36 pm
FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஸ்பெயின் அணி முன்னணி வகிக்கிறது
July 14, 2026, 9:52 am
உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்
July 14, 2026, 9:48 am
மெஸ்ஸி, நெய்மர் வரிசையில் எர்லிங் ஹாலண்ட்
July 13, 2026, 11:28 am
எம்பாப்பே சிறந்த நிலையில் இருப்பது பிரான்சுக்கு நிம்மதியை அளித்துள்ளது
July 13, 2026, 11:28 am
