நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜப்பான் பொதுப் பூப்பந்து போட்டி: நாட்டின் புதிய கலப்பு இரட்டையர் ஜிம்மி வோங்- செங் சு இன் அசத்தல் வெற்றி 

பெட்டாலிங் ஜெயா- 

ஜப்பான் பொதுப் பூப்பந்து போட்டியில் நாட்டின் புதிய கலப்பு இரட்டையர் ஜோடியான ஜிம்மி வோங் - செங் சு இன் சுற்று 16க்கு நிலைநிறுத்தி அனைவரையும் ஆச்சிரியத்தி ல் ஆழ்த்தினர் 

பூப்பந்து உலக தரவரிசையில் 118ஆவது இடத்தில் இருக்கும் ஜிம்மி வோங்- செங் சு இன் ஜோடி உலகின் 14ஆவது நிலையில் உள்ள ஜப்பானின் யுய்ஷி ஷிமோகாமி- சயாகா ஹொபாரா ஜோடியை 21-19, 11-21, 21-19 என்ற புள்ளிகளில் வீழ்த்தினர் 

ஜிம்மி-சூ யின் ஜோடிக்கு இது ஒரு பெரும் உத்வேகமாக அமைந்தது, குறிப்பாக ஜப்பான் ஓபன் ஒரு மதிப்புமிக்க உலக டூர் சூப்பர் 750 போட்டி என்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெற்றது.

அவர்கள் தற்போது இந்தோனேசியா நாட்டு ஜோடி அல்லது பிரான்ஸ் நாட்டின் ஜோடியை அடுத்த சுற்றில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

கோ சூன் ஹுவாட்-ஷெவோன் ஜெமி லாய் ஜோடி தொடக்கச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறியுள்ளதால், கலப்பு இரட்டையர் பிரிவின் கடைசி 16 சுற்றுக்கு மலேசியாவிலிருந்து குறைந்தது இரண்டு பிரதிநிதிகளாவது தகுதி பெறுவார்கள்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset