நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்

டல்லாஸ்:

23ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் நாளை அதிகாலை அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெறுகிறது. 

இதில் 2 முறை சாம்பியனான பிரான்ஸ், 2010 உலக சாம்பியன் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரான்ஸ், காலிறுதியில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளது. 

கேப்டன் கிளையன் எம்பாப்பே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அந்த அணியின் பலமாக உள்ளனர்.

மறுபுறம், உறுதியான தடுப்பாட்டத்துடன் விளங்கி வரும் ஸ்பெயின், காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி கடைசி நான்குக்குள் நுழைந்து.

லாமின் யமால், டேனி ஒல்மோ, ரோட்ரி உள்ளிட்டோர் அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

இதுவரை இரு அணிகளும் 38 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ஸ்பெயின் 18 வெற்றிகளும், பிரான்ஸ் 13 வெற்றிகளும் பெற்றுள்ளன.

7 ஆட்டங்கள் சமநிலையில் முடிந்துள்ளன. சமீபத்திய இரண்டு மோதல்களிலும் ஸ்பெயினே வெற்றி பெற்றுள்ளது.

விறுவிறுப்பை ஏற்படுத்தும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset