நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸி, நெய்மர் வரிசையில் எர்லிங் ஹாலண்ட்

நியூ ஜெர்சி: 

மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில் நடக்கும் உலகக்  கால்பந்து 23ஆவது சீசனில், ரசிகர்களின் மனதை கவர்ந்த வீரர்களில் நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் உள்ளார். 

இம்முறை விளையாடிய 5 போட்டியில், 7 கோல் அடித்துள்ள ஹாலண்ட், அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் பிரான்சின் எம்பாப்வே (8 கோல்), அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி (8) ஆகியோருக்கு பின் 3ஆவது இடத்தில் உள்ளார் ஹாலண்ட்

எர்லிங் ஹாலண்ட்டின் புகழ் தென் அமெரிக்க நாடான பெருவிலும் பரவி உள்ளது. 

அங்குள்ள பெற்றோர், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஹாலண்ட்டின் பெயரை சூட்டி வருகின்றனர்.

இதுவரை 559 குழந்தைகளுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 468 பேருக்கு ஹாலண்ட் என்றும், 91 பேருக்கு எர்லிங் ஹாலண்ட் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெருவில், நட்சத்திர கால்பந்து வீரர்களின் பெயரை சூட்டுவது புதிதல்ல. 

பிரேசிலின் நெய்மர், அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, ஸ்பெயினின் யமால், போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டோரின் பெயரும் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இதில் நெய்மரின் பெயர் அதிகபட்சமாக 33,809 பேருக்கு சூட்டப்பட்டுள்ளது. 

மெஸ்ஸி என்று 3402 குழந்தைகளுக்கும், லயோனல் மெஸ்ஸி என்று 292 குழந்தைகளுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ரொனால்டோ என்று 1185 பேருக்கும், யமால் என 1241 பேருக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset