செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் நுழைந்தது ஸ்பெயின்: வெளியேறியது பிரான்ஸ்
வாஷிங்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, முதல் அணியாக இறுதியாட்டத்திற்கு நுழைந்துள்ளது ஸ்பெயின் அணி.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று நடைபெற்ற விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதின.
போட்டி தொடங்கிய நிமிடங்களிலேயே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாகப் போராடினர்.
எனினும், ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திய மைக்கெல் ஓயர்சபால், பந்தை கோல் வலைக்குள் அடித்து அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.
இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிற்பாதியிலும் ஸ்பெயின் அணியின் கை ஓங்கியே இருந்தது.
ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில், ஸ்பெயின் வீரர் பெட்ரோ போரோ மற்றொரு அசாத்தியமான கோலை அடித்து ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
பிரான்ஸ் அணி வீரர்கள் எவ்வளவோ போராடியும், ஸ்பெயின் அணியின் பலமான தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்று, உலகக் கிண்ண கனவை நோக்கி, இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.
தோல்வியடைந்த பிரான்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 10:19 am
டெஷாம்ப்ஸ் ஒரு மகத்தான சாதனையை விட்டுச் செல்கிறார்
July 14, 2026, 12:36 pm
FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஸ்பெயின் அணி முன்னணி வகிக்கிறது
July 14, 2026, 9:52 am
உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்
July 14, 2026, 9:48 am
மெஸ்ஸி, நெய்மர் வரிசையில் எர்லிங் ஹாலண்ட்
July 13, 2026, 11:28 am
எம்பாப்பே சிறந்த நிலையில் இருப்பது பிரான்சுக்கு நிம்மதியை அளித்துள்ளது
July 13, 2026, 11:28 am
