
செய்திகள் வணிகம்
மலேசியாவின் சிறந்த 10 தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO)...? - பட்டியலிடுகிறார் ஆலோசகர் பாப் லோ
மலேசியாவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளில் சிறந்த பத்து பேரைப் பட்டியலிட்டுள்ளார் லிங்க்டுஇன் LinkedIn தளத்தில் இயங்கி வரும் சந்தை ஆலோசகர் பாப் லோ (BOB LOW).
அவர்களில் மலாய், இந்தியர், சீனர் என மூவின மக்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் டத்தோ ஷாஹுல் ஹமீதும் ஒருவர்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருமே தத்தம் துறைகளில் சாதித்துக்காட்டியவர்கள். தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் நன்கு அனுபவப்பட்டு, முன்னேற்றம் கண்டிருப்பதுடன், அடுத்த தலைமுறையினரை சரியான வழியில் அழைத்துச் செல்லும் ஆற்றலும் மிக்கவர்கள் என்பது அவர்களின் சுயவிவரக் குறிப்புகளைப் பார்த்தாலே புரியும்.
முதலில் லிங்க்டுஇன் LinkedIn குறித்து சிறு விளக்கம். (விக்கிபீடியாவில் தெளிவாக உள்ளது).
லிங்க்டுஇன் LinkedIn என்பது வணிக ரீதியான சமூக வலைப்பின்னல் தளமாகும். இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள், பல்வேறு வகையான சேவையை அளிப்பவர்கள் என முக்கிய பதவிகளில் இருப்போர் அனைவரும் தத்தம் தொழில், வேலை, சேவை ரீதியாக இணைக்கப்பட்டு தத்தம் விபரங்களை பகிர்வதற்கு லிங்க்டுஇன் உதவுகிறது.
இத் தளத்தின் மூலம் வணிகத்தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் சிறப்பு அறிமுகங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவை எளிதாக கையாளப்படுகின்றன.
லிங்க்டுஇன் பதிவு செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் தங்களது விபரங்களையும் சேமித்து வைத்துக் கொண்டு தமக்கு தெரிந்தவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது. உறுப்பினரின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபர்களும் இணைப்பிகள்(Connections) என்றழைக்கப்படுகிறார்கள். இணைப்பியாக லிங்க்டுஇன்னில் பதிவு செய்யப்பட்ட எவரையும் வரவேற்கலாம்.
சரி... பாப் லோ எதற்காக, எந்த அடிப்படையில் மலேசியாவின் சிறந்த பத்து தலைமைச் செயலதிகாரி தேர்வு செய்துள்ளார், அவர்களை லிங்க்டுஇன் LinkedIn-இல் ஏன் பின்தொடர வேண்டும் என வலியுறுத்துகிறார் என்ற கேள்வி எழும். அதற்கு அவர் அளித்துள்ள விளக்கத்தைப் பார்ப்போம்.
"மலேசியாவில் ஐந்து மில்லியன் பேர் லிங்க்டுஇன் LinkedIn பயன்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தொழில் துறை முன்னோடிகள் ஆவர்.
"இந்தத் தொழிலதிபர்களில் சிறந்த பத்து பேரை தேர்வு செய்ய வேண்டும் என விரும்பினேன். அவர்கள் லிங்க்டுஇன் LinkedIn-இல் குறிப்பிட்ட கால அவகாசத்தில் எத்தனை முறை, எது குறித்து பதிவிடுகிறார்கள், சமுதாயத்துடன் எந்த வகையில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள், அவர்கள் சார்ந்த நிறுவனம் எவ்வளவு பெரியது, அவர்களைப் பின்தொடர்பவர்கள் எத்தனை பேர்? என்பன உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் எனது தேர்வு அமைந்துள்ளது," என்று கூறியுள்ளார் பாப் லோ.
மேலும், இந்த சிறந்த நிர்வாகிகளை தாம் ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைப்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், பத்து அதிகாரிகள் குறித்து குறிப்பிடும்போது, அந்தப் பட்டியலில் டத்தோ ஷாஹுல் தாவூத் படமும் அவரைப் பற்றிய குறிப்புகளும்தான் முதலில் இடம்பெற்றுள்ளன.
இதோ, பாப் லோ அளித்துள்ள மலேசிய நிறுவனங்களின் சிறந்த பத்து தலைமைத் செயலதிகாரிகளின் பட்டியல்.
1.
டத்தோ ஷாஹுல் ஹமீத் தாவூத்
பதவி: தலைமைச் செயலதிகாரி, மனிதவள மேம்பாட்டு வாரியம் (Human Resources Development Corporation (HRD Corp)
வாரந்தோறும் லிங்க்டுஇன் LinkedIn-இல் பதிவிடும் இவரை அத் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.
தொழிலதிபர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஒருவர், அத் துறையில் கால்பதிப்பது இயல்புதான். ஆனால், அவரும் தன் பங்கிற்கு துறைசார்ந்த செயல்பாடுகளில் தனி முத்திரை பதிக்கும்போது தனித்துவம் பெறுகிறார். அவர் அத் துறையில் பிறர்க்கு வழிகாட்டும் ஆற்றல் கொண்டவராகவும் உருப்பெறுகிறார்.
அந்த வகையில், டத்தோ ஷாஹுல் தாவூத்தை பல்வேறு ஆற்றல்களையும் தலைமைத்துவத்தையும் கொண்ட தலைமைச் செயலதிகாரி எனக் குறிப்பிடலாம்.
பல்வேறு இன, மதங்களைச் சேர்ந்த மக்களுடன் இயல்பாக பேசிப்பழகக் கூடியவர்; உரிய நேரத்தில் தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்.
45 வயதான டத்தோ ஷாஹுல் தாவூத், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர். பல்வேறு சமூக மற்றும் தொண்டூழியப் பணிகளில் பங்கேற்கக் கூடிய இவர்.
மனிதவள மேம்பாட்டு வாரியத்தின் தலைமைச் செயலதிகாரியாக திறம்பட செயலாற்றி வருகிறார்.
கொரோனாவுக்குப் பிந்தைய மலேசியாவில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் வேலை வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள் என்பது பொருளியல் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
இத்தகைய சவாலான, சோதனைமிக்க காலகட்டத்தில், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் திறமைவாய்ந்த அதிகாரிகளுக்கும் உள்ளது. அந்த பொறுப்பை நூறு விழுக்காடு நிறைவேற்றும் வேட்கையுடன் செயல்பட்டு வருகிறார் டத்தோ ஷாஷுல் ஹமீத் தாவூத்.
2. டோனி ஃபெர்னான்டஸ்
பதவி: தலைமைச் செயல் அதிகாரி, ஏர் ஆசியா குழுமம்
வாரந்தோறும் பல்வேறு பதிவுகளை வெளியிடும் இவரை சுமார் 111,000 பேர் பின்தொடர்கிறார்கள்.
3.
காஷிஃப் அன்சாரி
பதவி: இணை தோற்றுநர் மற்றும் குழும தலைமைச் செயல் அதிகாரி Juwai IQI
வாரந்தோறும் பல்வேறு பதிவுகளை வெளியிடும் இவரை சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
4.
கைருடின் ரஹிம்
பதவி: துணை தலைமைச் செயலதிகாரி - Investment Development Invest in Malaysia நிறுவனம்.
தினந்தோறும் பதிவுகளை வெளியிடும் இவரை சுமார் 9 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.
5.
டத்தோ டாக்டர் அஹ்மத் சபிரின் அர்ஷத்
பதவி: தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, SIRIM பெர்ஹாட் குழுமம்.
அநேகமாக தினமும் பல்வேறு பதிவுகளை வெளியிடும் இவரை 111,000 பேர் பின்தொடர்கிறார்கள்.
6.
ஜலில் ரஷித்
பதவி: குழும தலைமைச் செயல் அதிகாரி, பெர்ஜாயா வாரியம் பெர்ஹாட் Group CEO, Berjaya Corporation Berhad
வாரந்தோறும் பல்வேறு பதிவுகளை வெளியிடும் இவரை சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
7.
சார்ல்ஸ் ப்ரூவர் (Charles Brewer)
பதவி: குழும தலைமைச் செயல் அதிகாரி, போஸ் மலேசியா பெர்ஹாட் Pos Malaysia Berhad
வாரந்தோறும் பல்வேறு பதிவுகளை வெளியிடும் இவரை சுமார் 351 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
8.
ஷ்யாருநிஸாம் சம்சுதின்
பதவி: நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி, UEM Edgenta பெர்ஹாட்
வாரந்தோறும் பல்வேறு பதிவுகளை வெளியிடும் இவரை சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
9.
முவாஸம் மொஹம்மத் - Muazzam Mohamed
பதவி: தலைமைச் செயல் அதிகாரி, Bank Islam Malaysia Berhad
வாரந்தோறும் பல்வேறு பதிவுகளை வெளியிடும் இவரை சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
10.
ரஃபிஸா கஸாலி Rafiza Ghazali
பதவி: குழும தலைமைச் செயல் அதிகாரி, Cradle Fund
வாரந்தோறும் பல்வேறு பதிவுகளை வெளியிடும் இவரை சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm