செய்திகள் கலைகள்
VANAKKAM MAXX ஏற்பாட்டில் வணக்கம் வாய்ஸ் இசை போட்டி அறிமுகம்
பெட்டாலிங் ஜெயா:
மலேசியாவின் இலக்கவியல் தமிழ் ஊடகமான வணக்கம் மலேசியா, அதன் VANAKKAM MAXX OTT தளத்தின் ஏற்பாட்டில் வணக்கம் வாய்ஸ் 2026 என்று தேசிய அளவிலான தமிழ்ப் பாடல் திறன் தேடல் போட்டி இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மலேசியா முழுவதும் திறமையான பாடகர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து இசைத்துறையில் முன்னேற்றும் நோக்கத்துடன் இந்த போட்டி நடத்தப்படுகிறது
VANAKKAM VOICE 2026 ஒரு சாதாரண போட்டி அல்ல, இசை மீது ஆர்வமுள்ள மலேசியர்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் தேசிய அளவில் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளவும் உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு தளமாகும் என்று VANAKKAM MALAYSIA & VANAKKAM MAXX தளத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தியாகராஜன் முத்துசாமி கூறினார்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு BOH MALAYSIA நிறுவனம் ஆதரவளிக்கிறது.
VANAKKAM VOICE இசை நிகழ்ச்சியின் போட்டிக்கான பதிவு 18 ஜூலை 2026 முதல் 14 ஆகஸ்ட் 2026 வரை நடைபெறும்.
18 வயதும் அதற்கும் மேற்பட்ட அனைத்து மலேசியர்களும் இதில் பங்கேற்காலம். தமிழ்மொழியில் பாடும் ஆர்வம் கொண்டவர்கள் 90 வினாடிகள் கொண்ட கிடைமட்ட வடிவிலான பாடல்களை இயங்கலை இணைப்பின் மூலம் சமர்ப்பித்து போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மலேசியா முழுவதும் உள்ள தமிழ் இசை ஆர்வலர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தேசிய மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள INDIA GATE உணவகத்தில் VANAKKAM VOICE இசை நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
