செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: 10 வீரர்களுடன் விளையாடிய சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு அர்ஜெண்டினா முன்னேறியது
போஸ்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 10 வீரர்களுடன் விளையாடிய சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி
அரையிறுதிக்கு அர்ஜெண்டினா முன்னேறியது.
பிபா உலக கிண்ண கால்பந்தின் கடைசி காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா, சுவிட்ஸர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கிய 10ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் இந்த கோலை அடித்தார்.
அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலைப் பெற்றது.
பிற்பாதி நேரத்தில் சுவிட்ஸர்லாந்து வீரர்கள் அபாரமாக விளையாடினர்.
ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் அந்த அணியின் டான் என்டோய் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.
72ஆவது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ப்ரீல் எம்போலோ சிவப்பு அட்டை மூலம் வெளியேற்றப்பட்டார்.
இதனால் சுவிட்ஸர்லாந்து 10 வீரர்களுடன் கடுமையாக போராடியது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிவுற்றது.
இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. முதல் 15 நிமிடத்தில் கடுமையாக போராடி அர்ஜெண்டினாவை கோல் அடிக்கவிடாமல் தடுத்தது.
அதன்பின் மீண்டும் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா ஆதிக்கம் செலுத்தியது. 112ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ஜூலியன் அல்வாரஸ் கோல் அடித்தார். அதன்பின் 120+1 நிமிடத்தில் மார்ட்டினஸ் கோல் அடிக்க அர்ஜெண்டினா 3-1 என சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
