நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியின் ஆளுமை அபாரமானது; ஆனால் தற்காப்பில் பலவீனமாக உள்ளார்: ரூனி

அட்லாண்டா:

கால்பந்து அரங்கில் தனது வெற்றிகள் அனைத்தையும் உலகின் முன்னணி நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி ஏறக்குறைய நிறைவு செய்திருக்கார்.

ஆனால் வரும் வியாழக்கிழமை அட்லாண்டாவில் நடைபெறும் 2026 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அர்ஜெண்டினாவை வழிநடத்தும்போது அவர் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவார்.

தேசிய அணிக்காக 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்திருந்தபோதிலும், எட்டு முறை பலோன் டி ஓர் விருதை வென்ற இவர், தனது விளையாட்டு வாழ்க்கையில் இங்கிலாந்து அணியை ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.

மெஸ்ஸி இதற்கு முன்னர் காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டார். 

ஆனால், கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினா 3-1 என்ற கோல் கணக்கில் மீண்டு வந்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கோல் அடிக்கத் தவறினாலும், இத்தொடரில் முதல் முறையாக அவர் எட்டு கோல்களுடன் பிரான்ஸ் முன்கள வீரர் கிளையன் எம்பாப்பேவுடன் இணைந்து கோல்டன் பூட் பந்தயத்தில் முன்னணியில் நீடிக்கிறார். 

மேலும், உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்காப்பு ஆட்டக்காரர்களுக்கு உதவ மெஸ்ஸி பின் வாங்கி வர மறுப்பது, 

தோமஸ் டுச்செலின் அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பாக அமையக்கூடும் என்று இங்கிலாந்தின் முன்னாள் முன்கள வீரர் வெய்ன் ரூனி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset