செய்திகள் விளையாட்டு
எம்பாப்பே சிறந்த நிலையில் இருப்பது பிரான்சுக்கு நிம்மதியை அளித்துள்ளது
போஸ்டன்:
தனது கணுக்கால் காயம் குறித்த கவலைகளுக்குப் பிறகு, கேப்டன் கைலியன் எம்பாப்பே நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதால், பிரான்ஸ் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
மொராக்கோவுக்கு எதிரான உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோது, ரியல் மாட்ரிட் நட்சத்திரமான இவர் மாற்று வீரராக வெளியேற்றப்பட்டதால் செய்திகளில் இடம்பிடித்தார்.
ஆனால், ஸ்பெயினுடன் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்த முன்கள வீரர் முன்னேற்றம் கண்டு வருவதை, லெஸ் ப்ளூஸின் பயிற்சி முகாமில் இருந்து வெளிவந்துள்ள புதிய காணொளிகள் காட்டுகின்றன.
அணி தங்கியிருந்த ஹோட்டலில், பிரான்ஸ் ஜாம்பவான் தெர்ரி ஹென்றியுடன் எம்பாப்பே கேலிப்பேசிப் பேசியதைக் கண்டபோது, காயத்தால் அவரது 2026 உலகக் கிண்ண பயணம் பாதிக்கப்படலாம் என்ற கவலைகள் தணிந்தன.
27 வயதான இவர், மைக்கேல் ஒலிசே, ஜீன் பிலிப் மட்டேட்டா ஆகியோருடன் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்.
மொராக்கோவுக்கு எதிரான போட்டியில் அவரை ஆடுகளத்திலிருந்து வெளியேறச் செய்த கணுக்கால் பிரச்சினையால் அவர் அவதிப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 11:28 am
மெஸ்ஸியின் ஆளுமை அபாரமானது; ஆனால் தற்காப்பில் பலவீனமாக உள்ளார்: ரூனி
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
