செய்திகள் மலேசியா
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
மலாக்கா:
ஏழு நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வரை நியமிக்க அனுமதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு சட்டமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜசெக மலாக்கா மாநில அரசிலிருந்து விலகுகிறது.
தேசிய முன்னணி தலைமையிலான மாநில நிர்வாகத்தில், கட்சியைச் சேர்ந்த இரண்டு ஆட்சிக் குழு உறுப்பினர்கள், இரண்டு துணை செயற்குழு உறுப்பினர்கள், ஒரு துணை சபாநாயகர் ஆகியோர் தங்கள் பதவிகளிலிருந்து விலகுவார்கள் என்று மலாக்கா ஜசெக தலைவர் கூ போய் தியோங் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, நியமிக்கப்படக்கூடாது.
இதனால் இந்தத் திருத்தம் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று அவர் கூறினார்.
தொழில் வல்லுநர்கள், நிபுணர்களின் சேவைகளை நாட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மறுக்கவில்லை.
ஆனால், சட்டசபையைக் கூட்டவும் வாக்களிக்கவும் அதிகாரம் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களாக அவர்கள் நியமிக்கப்படக்கூடாது என்று அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
