செய்திகள் மலேசியா
பூச்சோங் 14இல் இலவச மருத்துவ முகாம்: பல் உட்பட 15 மருத்துவ பரிசோதனைகள் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்படும்: டத்தோ ஏபி சிவம்
பூச்சோங்:
பூச்சோங் 14இல் நடைபெறும் இலவச மருத்துவ முகாமில் பல் உட்பட15 பரிசோதனைகள் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்படும்.
பூச்சோங் 14ஆவது மைல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ டாக்டர் ஏ.பி. சிவம் இதனை கூறினார்.
பூச்சோங் நாடாளுமன்ற சேவை மையம்,
பெட்டாலிங் மாவட்ட சுகாதாரத் துறை, பெட்டாலிங் மாவட்ட பல் சுகாதார துறை,
செர்டாங் மருத்துவமனை வருகையாளர்கள் குழு ஆகியவற்றுடன் இணைந்து இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாம் எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சனிக்கிழமை காலை மணி 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பூச்சோங் 14ஆவது மைலில் அமைந்துள்ள ஆலய மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆலய தரப்பினருடன் மட்டுமல்லாமல் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இலவச உடல்நல கருத்தரங்குகள், சுகாதார முகப்புகள் யாவும் அமைக்கப்படவுள்ளது.
இதனால் பொதுமக்கள் நோய் தொடர்பான மேலதிக விபரங்களையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று டத்தோ ஏபி சிவம் கூறினார்.
பொதுமக்கள் குறிப்பாக இந்தியர்கள் தங்களின் உடல்நலம் மீது அதீத அக்கறை கொள்ளாமல் இருப்பது பெரும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இதனை களையும் பொருட்டு இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பூச்சோங் 14 மைல் சுகாதார மையத்தின் பல் மருத்துவ பிரிவு சுகாதார அதிகாரி டாக்டர் மஞ்ஜித் கேட்டுக் கொண்டார்.
இந்த உடல்நல சுகாதார முகாமில் பல் பரிசோதனை, கண் பரிசோதனை, வாய் புற்றுநோய் பரிசோதனை, BMI உடல் குறியீடு சோதனைகள், பல் சுகாதார கருத்தரங்கு ஆகியவை இடம்பெறவிருக்கிறது.
அத்துடன் புகைப்படம் எடுக்கும் முகப்பிடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக.
மேலும், மகளிர்களுக்கான PAP SMEAR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது என்று அவர் கூறினார்.
பூச்சோங் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் இந்த இலவச முகாமில் தங்கள் குடும்பத்தாருடன் பங்கேற்று பயனடையுமாறு டத்தோ டாக்டர் ஏ.பி. சிவம் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
