செய்திகள் மலேசியா
16ஆவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எண்ணம் இல்லை: மடானி அரசுக்கு கால அவகாசம் வேண்டும்- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்-
நாட்டில் 16ஆவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் நடப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை மேற்கொள்ள கால அவகாசம் தேவை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாட்டு மக்களுக்கு நிலையான அரசியல் உறுதித்தன்மை, பொருளாதார மேம்பாடு தான் தேவையாக உள்ளதே தவிர தேர்தல் பரப்புரைகள் அல்ல.
மக்கள் தற்போது நடப்பு அரசாங்கம் ஆட்சி செய்ய ஆணையை வழங்கியுள்ளார்கள். பொதுத்தேர்தல் வரை நடப்பு அரசாங்கம் ஆட்சியமைக்கும் என்று மக்களவையில் பிரதமரின் கேள்வி- பதில் அங்கத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசினார்.
நிர்வாகம் எப்போதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, தேசிய ஆளுகையில் கவனம் செலுத்த வேண்டும் என விரும்பும் மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்கிறது என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
