செய்திகள் மலேசியா
கெஅடிலானின் போராட்டம் மக்களின் நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது; சீர்த்திருத்தங்களை செய்வோம்: டாக்டர் குணராஜ்
செந்தோசா:
கெஅடிலானின் போராட்டம் மக்களின் நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆக கட்சியில் தொடர்ந்து சீர்த்திருத்தங்களை செய்வோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகளை கெஅடிலான் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கட்சியை வலுப்படுத்தவும் மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து பெறவும் முன்னேற்றங்களைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தும்.
கெஅடிலான் நிறுவப்பட்டதிலிருந்து அதன் போராட்டம் எப்போதும் மக்களின் நம்பிக்கையின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
எனவே ஒவ்வொரு தேர்தல் முடிவும் முழுப் பொறுப்புடனும் ஜனநாயக உணர்வுடனும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
கெஅடிலானின் போராட்டம் மக்களின் நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஒரு முடிவை எடுக்கும்போது, நாம் அதை மதித்துத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜொகூர் மக்கள் வழங்கிய முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நிச்சயமாக நாங்கள் முன்னேற்றங்களைச் செய்வோம், சிந்திப்போம்.
மேலும் மக்களின் நாடித்துடிப்புக்கு நெருக்கமாக இருக்க கட்சி அமைப்பை வலுப்படுத்துவோம் என்று கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினருமான குணராஜ் கூறினார்.
இந்தத் தோல்வி போராட்டத்தின் முடிவல்ல.
மாறாக, கட்சி தனது அணுகுமுறையை மறுமதிப்பீடு செய்யவும், அதன் அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்தவும், அதன் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை செயல்படுத்தும் உத்திகளை மேம்படுத்தவும் இது ஒரு நினைவூட்டலாகும்.
இனம், மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் தனது சீர்திருத்தத் திட்டம், நல்லாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை கெஅடிலான் தொடர்ந்து பாதுகாக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
