செய்திகள் மலேசியா
பேரா மாநில பணி ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரிகள் சங்கம் சமூக சேவையை விரிவுப்படுத்த சொந்த அலுவலகக் கட்டிடத்தை வாங்கியது: புவனேஸ்வரன்
ஈப்போ:
போலிஸ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற போதிலும் சமுகத்திற்கு தங்களின் சேவை தொடரவேண்டும் என்ற நோக்கத்தில் பேரா மாநில மக்களுக்கான சமூகப் பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்கும் நோக்கில், பேரா மாநில பணி ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரிகள் சங்கம் அமைக்கபட்டது.
இன்று அது அதன் சேவையை மேலும் விரிவாக்க 230,000 ரிங்கிட் செலவில் தனது சொந்த அலுவலகக் கட்டடத்தை வாங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று சங்கத்தின் தலைவர் க. புவனேஸ்வரன் கூறினார்.
சொந்த அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கனவு 2022ஆம் ஆண்டிலேயே உருவானது.
உறுப்பினர்களின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு, விடாமுயற்சியால் 2026ஆம் ஆண்டில் அந்தக் கனவு நனவாகியுள்ளது என்றார்.
இந்தக் கட்டடம் ஈப்போ, ஜாலான் சுல்தான் யூசுப் பகுதியில் அமைந்துள்ள விஸ்மா ஏசான் கட்டடமாகும்.
சமூகப் பணிகளை ஒருங்கிணைத்து மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் மையமாக இது செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது வெற்றிக்குப் பின்னால் சங்க உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் இருந்ததாகக் குறிப்பிட்ட பன்னீர் செல்வம் குறிப்பாக துணைத் தலைவர் சுகுமாரன் தொடர்ந்து ஊக்கமளித்து, உன்னால் முடியும்; நான் உன் பின்னால் இருக்கிறேன் என்று தன்னம்பிக்கையை அளித்ததே இந்த முயற்சிக்கு வலுசேர்த்ததாக நன்றியுடன் கூறினார்.
நேற்று ஈப்போவில் உள்ள வழக்கறிஞர் நிறுவனத்தில் நடைபெற்ற புதிய கட்டடம் வாங்கியது தொடர்பாக நடைபெற்ற கையெழுத்து ஒப்பந்தம் நிகழ்விற்குப் பின்னர் இந்த தகவலைத் புவனேஸ்வரன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
