செய்திகள் மலேசியா
போரஸ்ட் சிட்டியில் உள்ள நெட்வொர்க் பள்ளி குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்: ஓன் ஹபிஸ்
ஜொகூர்பாரு:
சர்ச்சை ஏற்படுத்தியுள்ள போரஸ்ட் சிட்டியில் உள்ள நெட்வொர்க் பள்ளி குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
ஜொகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை கூறினார்.
இஸ்ரேலியர்கள் இரண்டாம் நாட்டு கடப்பிதழை பயன்படுத்தி இந்த பள்ளி திட்டத்தில் பங்கேற்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது தொடர்பான பொதுமக்களின் கவலைகளைத் தொடர்ந்து அப்பள்ளியின் செயல்பாடு குறித்து முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
மக்கள் எழுப்பிய கவலைகளை மாநில அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும் சட்டத்திற்கும், மாநிலம், நாட்டின் நலன்களுக்கும் முரணான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஜொகூர் ஒரு இடமாக இருக்காது.
சட்டம், இறையாண்மை, ஜொகூர், மலேசியாவின் நலன்களுக்கு முரணான சித்தாந்தத்தையோ அல்லது இயக்கத்தையோ இந்த மாநிலத்தைக் கொண்டுவருவதற்கான தளமாக எந்தவொரு கட்சியும் மாற்றுவதை ஜொகூர் அரசாங்கம் அனுமதிக்காது என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
