செய்திகள் மலேசியா
கெமாஸ் சட்டமன்றத் தொகுதியில் கைரி போட்டி: வலுக்கும் ஆருடங்கள்
சிரம்பான்:
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் கெமாஸ் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெம்பாவ் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடினை, தேசிய முன்னணி இத்தொகுதியில் போட்டியிட நிறுத்தும் என ஆருடங்கள் வெளியானதால் இது நிகழ்ந்துள்ளது.
கைரியின் வேட்பாளர் நியமனம், இந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கான தேசிய முன்னணயின் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக, முன்னாள் அம்னோ இளைஞர் பகுதி தலைவரான அவரால், தேர்தலுக்கு பிறகு மாநிலத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கான தேசிய முன்னணியின் இலக்குகளை கூட்டாகச் செயல்படுத்த முடியும் என்று அந்தத் தகவல் தெரிவித்தது.
16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.
இந்த ஆருடம் எல்லாவற்றிற்கும் நாளை பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
