செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் 5 தமிழ்ப் பள்ளிகளுக்கான நிலப் பட்டாவை பள்ளி நிர்வாகத்திடம் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு எடுத்து வழங்கினர்.
மாநில செயலகத்தின் நான்காவது மாடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் அழைக்கப் பட்ட நிலையில் பள்ளி நிலப் பட்டாவை அவர் ஒப்படைத்தார்.
பள்ளிக்கான நிலப் பட்டாவைப் பெற்ற காப்பார் வலம்புரோசா தோட்ட தமிழ்ப்பள்ளி, சிப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூலோ, கோல்ட்பீல்டு தமிழ்ப்பள்ளி, கிள்ளான் ஹைலண்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி, பந்திங், சுங்கை புவாயா தமிழ்ப் பள்ளி ஆகிய 5 தமிழ்ப்பள்ளி களின் நிர்வாகத்தினர் அவரது அலுவலகத்தில் பள்ளிக்கான நிலப் பட்டாவைப் பெற்று கொண்டனர்.
மேலும் இதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டுவுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்ப்பள்ளியே தமது முதல் தேர்வாக தாம் கருதுவதால், மாநில அளவில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்து செயல்படவும் இந்திய மாணவர்கள் தாய் மொழிக் கல்வியை நேர்த்தியாக கற்று உயரவும் வேண்டி மாநில அரசின் ஒத்துழைப்புடன் பள்ளிக்கான நிலப் பட்டாவை தாம் பெற்று உரிய பள்ளி நிர்வாகத்திடம் தாம் நேரில் ஒப்படைத்ததாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், மாநில கல்வி இலாகா, நில இலாகா, மாவட்ட ஆட்சியர் இலாகா, பள்ளிகள் மேலாளர் வாரியம் பள்ளிகளில் செயல் படும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோரின் கூட்டுப் பணி நடவடிக்கைகள் வாயிலாக இந்தத் திட்டத்தை தாம் வெற்றிகரமாக நிறைவு செய்ததாக பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு தகவல் வெளியிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
