செய்திகள் கலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது
சென்னை-
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம், எதிர்வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வர வேண்டிய ஜனநாயகன் திரைப்படம், சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக இந்த திரைப்படம் தற்போது வெளியாகிறது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN PRODUCTIONS தரப்பு தெரிவித்தது
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு படம் வெளியாவதால் தமிழ்ச்சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டெ, பிரியாமணி, பாபி டியோல், மமிதா பைஜு, நரேன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:45 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள DC திரைப்படம்: அனிருத் இசை சம்பவம்
August 6, 2026, 4:59 pm
புதுச்சேரியில் 3ஆவது உலகத் திரைப்பட விழா: 10 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும்
August 6, 2026, 4:48 pm
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
August 5, 2026, 7:16 am
கஜினி, வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
July 30, 2026, 10:47 am
44 வயதில் தான் உங்களுக்கான வாழ்வு தொடங்குகிறது: ஓப்ராவின் அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்ட த்ரிஷா
July 28, 2026, 5:47 pm
