செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
போஸ்டன்:
உலகக் கிண்ண கால்பந்து திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களின் கட்டிப்போட்ட முதல் காலிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணி மொராக்கோவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டம் தொடங்கியது முதலே பிரான்ஸ் வீரர்கள் சூறாவளியாக சுழன்றடித்தனர்.
ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்திலேயே பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்வே அடித்த லாங் ஷாட் கோலை, மொராக்கோ கோல்காவலர் யாசின் போனவ் அபாரமாக தடுத்தார்.
தொடர்ந்து 31ஆவது நிமிடத்தில், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இந்த பொன்னான வாய்ப்பில், எம்பாப்வேயை அடக்கிய போனவ், மொராக்கோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலை ஆனது.
பிற்பாதியில் பிரான்ஸ் அணி தனது ஆக்ரோஷத்தை அதிகரித்தது.
ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில், மொராக்கோ தடுப்பு அரணை தவிடுபொடியாக்கிய எம்பாப்வே, மின்னல் வேகத்தில் பந்தை கோலாக்கி பிரான்ஸ் அணியை முன்னிலை பெற (1-0) வைத்தார்.
இந்த கோல் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் 20 கோல்களை அடித்த சாதனையையும் படைத்தார் எம்பாப்வே.
இதன் தொடர்ச்சியாக 66ஆவது நிமிடத்தில், எம்பாப்வே கொடுத்த அருமையான பந்தை பெற்றுக்கொண்ட உஸ்மான் டெம்பேலே, மொராக்கோ கீப்பரை ஏமாற்றி அசத்தலாக இரண்டாவது கோலை அடித்தார்.
பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் கடுமையாக போராடினர்.
இறுதியில், ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு கெத்தாக தகுதி பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரான்ஸிடம் உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றில் தோற்று மொராக்கோ அணி கண்ணீருடன் வெளியேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:56 am
வலைப்பந்துப் போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனைப் பயணத்தைத் தொடரும் சிகாம்புட் தமிழ்ப்பள்ளி
August 24, 2026, 10:41 am
தேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்: மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு இரங்கல்
August 24, 2026, 9:43 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
August 24, 2026, 9:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 22, 2026, 11:03 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக் அறிமுக அணியான ஹுல் சிட்டியிடம் மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
August 22, 2026, 10:41 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் சிலாங்கூருக்கு இரண்டு தங்கப்பதக்கம்
August 22, 2026, 10:40 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் பினாங்கு ரினிஸா, பேரா லாசிமித்ராவுக்கு தங்கப் பதக்கம் வென்றனர்
August 22, 2026, 10:39 pm
சுக்மா சிலம்பப் போட்டியில் முதல் தங்கத்தை வென்று கூட்டரசுப் பிரதேச அணி சாதனை
August 22, 2026, 9:04 am
சவூதி புரோ லீக்கில் அல் நசர் வெற்றி: 977ஆவது கோலை அடித்த ரொனால்டோ
August 22, 2026, 9:02 am
