செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்; கடைசி 10 நிமிடங்களில் 3 கோல்கள்: காலிறுதியில் அர்ஜெண்டினா
வாஷிங்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் விறுவிறுப்பான ரவுண்ட்-16 சுற்றில், எகிப்து அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது.
கடைசி நிமிடங்களில் மெஸ்சி என்சோ பெர்னாண்டஸ் காட்டிய அதிரடியால் அர்ஜெண்டினா காலிறுதிக்கு தகுதி பெற்றது.
அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடந்து வரும் பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி தற்பொழுது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
மிக முக்கியமான ரவுண்ட்-16 போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி, பலம் வாய்ந்த எகிப்து அணியை எதிர்கொண்டது.
தோற்றால் வெளியேற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இரு அணிகளும் களம் கண்டன.
ஆட்டம் தொடங்கிய முதலே எகிப்து அணி அர்ஜெண்டினாவிற்கு கடும் சவால் அளித்தது.
ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்திலேயே எகிப்து வீரர் யாசர் இப்ராஹிம் அற்புதாமாக ஒரு கோல் அடித்து அர்ஜெண்டினாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.
இதனால் முதல் பாதியில் எகிப்து 1-0 என முன்னிலை பெற்றது.
பிற்பாதியிலும் அர்ஜெண்டினாவின் தடுப்பாட்டத்தை உடைத்த எகிப்தின் முஸ்தபா ஜிகோ, 67ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார்.
இதனால் எகிப்து அணி 2-0 என வலுவான முன்னிலை பெற்று, அர்ஜெந்டினாவின் உலகக் கிண்ண கனவுக்கு வேட்டு வைக்கும் நிலைக்கு வந்தது.
கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், அர்ஜெண்டினா வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர்.
ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கிறிஸ்டியன் ரொமேரோ ஒரு கோல் அடித்து ஆட்டத்திற்குள் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, 83ஆவது நிமிடத்தில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'மேஜிக்' நிகழ்த்திய கேப்டன் லியோனல் மெஸ்சி, அசாத்தியமாக ஒரு கோல் அடித்து 2-2 என சமநிலையை கொண்டு வந்தார். .
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+3 நிமிடம்) அர்ஜெண்டினாவின் இளம் நட்சத்திரம் என்சோ பெர்னாண்டஸ், எகிப்தின் கோல் காவலரை ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளினார்.
இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி 'த்ரில்' வெற்றியைப் பதிவு செய்து, காலிறுதிக்குள் நுழைந்தது.
எகிப்து அணி உலகக் கிண்ண போட்டியில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
